திருவள்ளுவர் (Thiruvalluvar) இயற்றிய திருக்குறள் (Thirukkural) உலகப்
புகழ் பெற்ற இலக்கியமாகும். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில்
பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும்
சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும்
வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள்,
இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்)
பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.
திருக்குறளில் 133 அதிகாரங்களுங்களும், அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என்று மொத்தம் 1330 குறள்கள் உள்ளன. இவை அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்" என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெற்றது. திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
-------
திருக்குறளில் 133 அதிகாரங்களுங்களும், அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என்று மொத்தம் 1330 குறள்கள் உள்ளன. இவை அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்" என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெற்றது. திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
-------
அறத்துப்பால்
பாயிரவியல்
இல்லறவியல்
- 005. இல்வாழ்க்கை
- 006. வாழ்க்கைத் துணைநலம்
- 007. புதல்வரைப் பெறுதல்
- 008. அன்புடைமை
- 009. விருந்தோம்பல்
- 010. இனியவைகூறல்
- 011. செய்ந்நன்றி அறிதல்
- 012. நடுவு நிலைமை
- 013. அடக்கமுடைமை
- 014. ஒழுக்கமுடைமை
- 015. பிறனில் விழையாமை
- 016. பொறையுடைமை
- 017. அழுக்காறாமை
- 018. வெஃகாமை
- 019. புறங்கூறாமை
- 020. பயனில சொல்லாமை
- 021. தீவினையச்சம்
- 022. ஒப்புரவறிதல்
- 023. ஈகை
- 024. புகழ்
துறவறவியல்
- 025. அருளுடைமை
- 026. புலான்மறுத்தல்
- 027. தவம்
- 028. கூடாவொழுக்கம்
- 029. கள்ளாமை
- 030. வாய்மை
- 031. வெகுளாமை
- 032. இன்னாசெய்யாமை
- 033. கொல்லாமை
- 034. நிலையாமை
- 035. துறவு
- 036. மெய்யுணர்தல்
- 037. அவாவறுத்தல்
ஊழியல்
பொருட்பால்
அரசியல்
- 039. இறைமாட்சி
- 040. கல்வி
- 041. கல்லாமை
- 042. கேள்வி
- 043. அறிவுடைமை
- 044. குற்றங்கடிதல்
- 045. பெரியாரைத் துணைக்கோடல்
- 046. சிற்றினஞ்சேராமை
- 047. தெரிந்துசெயல்வகை
- 048. வலியறிதல்
- 049. காலமறிதல்
- 050. இடனறிதல்
- 051. தெரிந்துதெளிதல்
- 052. தெரிந்துவினையாடல்
- 053. சுற்றந்தழால்
- 054. பொச்சாவாமை
- 055. செங்கோன்மை
- 056. கொடுங்கோன்மை
- 057. வெருவந்தசெய்யாமை
- 058. கண்ணோட்டம்
- 059. ஒற்றாடல்
- 060. ஊக்கமுடைமை
- 061. மடியின்மை
- 062. ஆள்வினையுடைமை
- 063. இடுக்கணழியாமை
அமைச்சியல்
- 064. அமைச்சு
- 065. சொல்வன்மை
- 066. வினைத்தூய்மை
- 067. வினைத்திட்பம்
- 068. வினைசெயல்வகை
- 069. தூது
- 070. மன்னரைச் சேர்ந்தொழுதல்
- 071. குறிப்பறிதல்
- 072. அவையறிதல்
- 073. அவையஞ்சாமை
அரணியல்
கூழியல்
படையியல்
நட்பியல்
- 079. நட்பு
- 080. நட்பாராய்தல்
- 081. பழைமை
- 082. தீ நட்பு
- 083. கூடாநட்பு
- 084. பேதைமை
- 085. புல்லறிவாண்மை
- 086. இகல்
- 087. பகைமாட்சி
- 088. பகைத்திறந்தெரிதல்
- 089. உட்பகை
- 090. பெரியாரைப் பிழையாமை
- 091. பெண்வழிச்சேறல்
- 092. வரைவின்மகளிர்
- 093. கள்ளுண்ணாமை
- 094. சூது
- 095. மருந்து
குடியியல்
- 096. குடிமை
- 097. மானம்
- 098. பெருமை
- 099. சான்றாண்மை
- 100. பண்புடைமை
- 101. நன்றியில்செல்வம்
- 102. நாணுடைமை
- 103. குடிசெயல்வகை
- 104. உழவு
- 105. நல்குரவு
- 106. இரவு
- 107. இரவச்சம்
- 108. கயமை
காமத்துப்பால்
களவியல்
- 109. தகையணங்குறுத்தல்
- 110. குறிப்பறிதல்
- 111. புணர்ச்சிமகிழ்தல்
- 112. நலம்புனைந்துரைத்தல்
- 113. காதற்சிறப்புரைத்தல்
- 114. நாணுத்துறவுரைத்தல்
- 115. அலரறிவுறுத்தல்
கற்பியல்
- 116. பிரிவாற்றாமை
- 117. படர்மெலிந்திரங்கல்
- 118. கண்விதுப்பழிதல்
- 119. பசப்புறுபருவரல்
- 120. தனிப்படர்மிகுதி
- 121. நினைந்தவர்புலம்பல்
- 122. கனவுநிலையுரைத்தல்
- 123. பொழுதுகண்டிரங்கல்
- 124. உறுப்புநலனழிதல்
- 125. நெஞ்சொடுகிளத்தல்
- 126. நிறையழிதல்
- 127. அவர்வயின்விதும்பல்
- 128. குறிப்பறிவுறுத்தல்
- 129. புணர்ச்சிவிதும்பல்
- 130. நெஞ்சொடுபுலத்தல்
- 131. புலவி
- 132. புலவி நுணுக்கம்
- 133. ஊடலுவகை
சிறப்பிற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteனீதிச் சுவடி (JUDICIAL BOOK)
ReplyDelete[https://vetrichezhian9.wordpress.com/னீதிச்-சுவடி-judicial-book/]
சிவாயநம ==
ReplyDeleteதெய்வப் புலவன்=திருவள்ளுவர்
திருக்குறள் அரங்கேற்றம்.
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது..
👉🏿 திருக்குறளில் சைவ சித்தாந்தம் மட்டும்மல்ல சைவதமிழாின் வாழ்வியல் நெறியும் கூட.👈🏿
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
எல்லா எழுத்துக்களும் அ ஒலியை முதலாக உடையன. அதுபோல உலகு ஆதிபகவன் ஆகிய இறைவனை முதலாக உடையது.இறைவன் ஆதியும் பகவுமாக இருப்பவன் தோன்று-நிலையிலும் தோன்றா-நிலையிலும் ஆதியாக இருப்பவன்.
👉🏿'குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர்
ஆதி' எனக் குறிப்பிடுகிறார்.
👉🏿ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத்
திருக்குறள் குறிப்பிடுகிறது.
👉🏿-பண்ணிரு திருமுறைகள் இறைவனை
ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான், ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.
👉🏿பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:
👉🏿“ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே”
👉🏿“ஆதி பராபர மாகும் பராபரை
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி
நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.”
👉🏿“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று-எனார்
பேதிது உலகம் பிணங்குகின் றார்களே.”
👉🏿மூன்றாம் திருமுறை
👉🏿“பந்து சேர்விர லாள்பவ ளத்துவர்
வாயி னாள்பனி மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.”
👉🏿தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் கடவுள் வாழ்த்துப் பாடல்:
“ மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு.
அ.அருள்செல்வன்
Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
👍
ReplyDeleteGreat article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
ReplyDelete